நடிகர் அஜித்தின் 62-வது படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது. நடிகர் அஜித் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமைப்பது, தோட்டம் அமைப்பது, போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருபவர்.
தற்போது இவர் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் 62-வது படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவிடம் அஜித் கதை கேட்டதாகவும், கதை மிகவும் பிடித்துவிட்டதால் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .