Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தீபாவளியை கொண்டாட… விடிய விடிய மது குடித்த 3 பேர் மரணம்..!!

கோவையில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டிகை என்று வந்தாலே குடிமகன்கள் வழக்கத்தைவிட அதிகமாக குடிப்பது வழக்கமாகி விட்டது. அதன்படி, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 பேர் செய்த விபரீத செயலால் அவர்களின் உயிர் பறிபோயுள்ளது.. அதாவது, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேர்  இரவு முழுவதும் மது அருந்தி விட்டு மீண்டும் காலையில் டாஸ்மாக் கடையில் பிளாக்கில் வாங்கி மது குடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து சாலையில் மயங்கி விழுந்த 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |