நாளைய பஞ்சாங்கம்
05-11-2021, ஐப்பசி 19, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி இரவு 11.15 வரை பின்பு வளர்பிறை துதியை.
விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.22 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
தனியநாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
நாளைய ராசிப்பலன் – 05.11.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் நிலையில் சோர்வு மந்த நிலை ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் போகும். செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினைகளால் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களின் செல்வம் செல்வாக்கு உயரும். வேலை பளு குறையும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.