விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரைகளில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் முத்தழகு என்ற ஒரு புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து, விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சீரியலில் நாயகனாக பிரஜன் நடிப்பதாகவும், சரண்யா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த சீரியலுக்கு ‘வைதேகி காத்திருந்தாள்’ என தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.