Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. உரிமையாளர் அளித்த புகார்…. கைது செய்த போலீஸ்….!!

ஆடுகளை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் ஜெபஸ்டியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் 2 ஆடுகளையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பொன்னுத்தாய் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடுகளை திருடிச் சென்றது பேட்டை கக்கன்ஜி நகர் பகுதியில் வசிக்கும் ராஜா என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜாவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |