வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 1\2 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் பகுதியில் ஹெக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராஸ் அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கிராஸ் அஜித்திடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன்பின் கிராஸ் அஜித் வெளிநாட்டில் கப்பல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு போதிய முன் பணம் செலுத்தவில்லை எனக் கூறி கிராஸ் அஜித்தை 3 மாதங்களில் திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த கிராஸ் அஜித் இதுகுறித்து ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.