மதுரையில் இருக்க கூடிய ரோடுகள் குண்டும்குழியுமாக உள்ளது குறித்த கேள்விக்கு பத்திலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,
இதைத்தான் நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்…. மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே நாங்க போய் சொன்னோம். முதலில் கோரிக்கையாக சொன்னோம், அப்புறம் எழுத்துப்பூர்வமாக கூறினோம் ஆணையாளரிடம்…. எங்கள் ஆட்சியில் புதிய சாலைகள் எல்லாம் போடுவதற்கு புதிய டெண்டர் விட்டார்கள், அந்த டெண்டர் எல்லாம் இந்த அரசு ரத்து பண்ணி விட்டது. எனவே மீண்டும் நீங்கள் புதிதாக டெண்டர் விட வேண்டும், ஒப்பந்தகாரர் நியமிக்க வேண்டும், மழை வருவதற்கு முன்பாகவே இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறினோம்.
நாங்க சொன்ன எதையும் செய்யவில்லை, திரும்ப எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தோம், புதிதாக அமைந்த அரசானது ஆயிரம் கோடி ரூபாய் மதுரை மாநகராட்சி சிறப்பு நிதியாக கொடுக்க வேண்டும், அதன் அடிப்படையில் மதுரையில் இருக்கின்ற பணிகள் எல்லாம் நிறைவேற்ற வேண்டும், அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறினோம்.
ஆனால் நம்ம மாநில அரசு கண்டுக்கவில்லை, மாநகராட்சி நிர்வாகமும் கண்டுக்கவில்லை. இன்றைக்கு சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருக்கு. ஒரு பத்திரிகையில் பார்த்தேன் நாற்று நடலாம் போல இருக்கிறது, அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது சாலைகள். இதை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.