செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் போய் ஸ்லாப் வைக்குரீங்களே அது தவறில்லையா, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான், அதுவும் ரேஷன் பொருள் வாங்குபவர்களுக்கு தான், இப்படியெல்லாம் அரிசி வாங்குபவர்கள் மட்டும் தான் போய் வைங்க,
ஒரு குடும்பத்தில் ஒருவர் நகையை கூட்டுறவு சங்கத்தில் வையுங்க என்று மட்டும் திமுகவினர் சொன்னார்களா, அவர்கள் தலைவர்கள் சொன்னார்களா சொல்லவில்லையே. இவங்க தான் வைங்க வையுங்க என்று சொன்னார்கள். தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்ட மாதிரி கணக்கில திமுக இந்த மாதிரி கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இவுங்க ஆட்சியில்….
இவங்க இப்ப அறிவித்த திட்டங்கள் எல்லாம் பார்த்தால், எல்லாம் குளறுபடியாக தான் இருக்கிறது. இப்போ இலவச பேருந்து விட்டார்கள், இப்போது பேருந்துகளை எல்லாம் குறைக்க போகிறோம் என்கிறார்கள். ஏறுபவர்களுக்கு நடத்துனர் மரியாதை கொடுக்கிறதில்லை. இவர்கள் தான் அறிவிக்கிறார்கள், அறிவிக்கும் திட்டங்களை முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.