Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…! ஸ்டாலின் சொல்லி இருக்காரு…! நம்பி, ஏற்ற திருமாவளவன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பொதுவாக உள்ள 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு இருப்பதாக தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டிருக்கிற சூழலில் அதற்கு எந்த பாதிப்பும் நேராது என்று நம்பிகையில் இருக்கிறோம்.

சமூகநீதிக்கு 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விழிப்பாக இருந்து அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன வகையில் வாதாட வேண்டுமோ அந்த வகையில் போராட வேண்டும், வாதாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தல் கட்டமாக தமிழ்நாட்டில் சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்க என்னும் அடிப்படையில் நாங்கள் ரிசர்டு கேட்டகிரி என்று சொல்லப்படக்கூடிய சமுதாய பிரதிநிதிகளை சந்திக்கிறோம்.

கருத்தரங்கை அங்காங்கே நடத்தி வருகிறோம். அதற்கான ஒரு வெப்பத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம். அதன்பிறகு இந்த டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைப்போம் எங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்வோம். இதுகுறித்து மாண்புமிகு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் ஒரு அளவு நம்பிக்கை அளிக்கிறது. அந்த மாதிரியான அச்சம் தேவையில்லை.

தன்னார்வலர்கள் யார் யார் என்பதை நாங்கள் மிகத் தெளிவாக அறிந்து அதன் பிறகு தான் பணியாற்ற அனுமதிப்போம். மத்திய அரசு சொல்கிற அந்த கல்வி திட்டத்திற்கு மாநில அரசு முன்மொழிகிற கல்வி திட்டத்திற்கு தொடர்பு இல்லை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்…. பொறுத்திருந்து பார்க்கலாம். 12 மாவட்டங்கள் மட்டும் ஒரு முன்னோட்டமாக செய்ய முன் வந்திருக்கிறது தமிழக அரசு. எனவே முதல்வரின் கருத்தை நாம் நம்புகிறோம், ஏற்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |