நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்களுடைய வீடுகளில் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் பாட்டாசுகள் வெடிப்பதற்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்திருந்தது.இந்நிலையில் சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி இரண்டு மணி நேரம் மட்டுமே (காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரையும்) மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அரசு விதித்த விதி முறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.