கேரள சட்டசபையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் ஐடி பார்க்குகள் உள்ளன. இங்கு புதியதாக நிறுவனம் ஆரம்பிக்க வருபவர்கள் ஐடி நிறுவனங்களில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் பல நிறுவனங்கள் திரும்பி சென்றுவிட்டன.
இதனால், ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள் ஆரம்பிக்க கடந்த இரு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் முடிந்ததும் ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதி அளிக்கப்படும்” என்று கூறினார். முதல்வரின் இந்த அறிவிப்பு ஐடி நிறுவன ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.