கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் கிருஷ்ணன் மகன் அரிகரன் வசித்து வந்தார். இதில் அரிகரன் பாலக் கோடு அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2-ம் வருடம் பயின்று வந்தாராம். கடந்த ஒருவாரமாகவே அரிகரன் கல்லூரிக்கு போகாமல் இருந்து வந்தார். இதனால் கல்லூரிக்குச் செல்லும்படி அவருடைய தந்தை அரிகரனுக்கு அறிவுரை கூறியதாக தெரிகிறது.
இதன் காரணமாக மனமுடைந்த அரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.