சாக்கடைக்குள் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூரில் பெரும்பாலான குதிரைகள் நடு ரோட்டிலேயே சுற்றித் திரிகின்றது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மொடச்சூர் சுப்பு நகரில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குதிரை சாலையோரம் முளைத்திருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. இதனையடுத்து திடீரென குதிரை கால் தவறி அருகிலிருந்த சாக்கடையில் விழுந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடைக்குள் இருந்து வெளியே வர முடியாமல் குதிரை கத்தியது.
இந்நிலையில அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து கோவை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி சாக்கடையில் இருந்து குதிரையை உயிருடன் மீட்டெடுத்தனர். அதன்பின் காயங்கள் ஏதும் இன்றி குதிரை தானாகவே நடந்து சென்று விட்டது. ஆகவே குதிரை வளர்ப்பவர்கள் அதை லாயத்தில் கட்டி பராமரிக்க வேண்டும் என்றும் சாலையில் திரியவிடக்கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.