உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று அரசு சார்பில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “மத்திய அரசு உத்திரபிரதேசத்தில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 300 திட்டங்களுக்கான பணிகள் அடுத்த 2 மாதங்களில் முடிக்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதற்கு முன் இருந்த அரசுகள் மக்களின் பணத்தை கல்லறைகளுக்கு செலவிடப்பட்டது. ஆனால் தற்போது உள்ள பா.ஜனதா அரசு மக்களின் பணத்தை கோவில்களின் கட்டமைப்புக்கு செலவிடப்படுகிறது.இந்த மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறினால் குற்றமாக பார்த்தார்கள். ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் இறுதியாக ராமர் கோயில் களுக்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் வலிமை முன் தற்போது பணிந்து விட்டார்கள்.
எனவே ராமர் ஒவ்வொருவரையும் ஒன்று சேர்ப்பார் என்பது ராமரின் சக்தி. எனவே 2023 ஆம் ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். மேலும் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க உலகில் யாராலும் முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து அயோத்தியா நகரம் கலாச்சார நகரமாக மாறிவிட்டது. அதனால் இனிவரும் நாட்களில் வளர்ச்சித் திட்டங்கள் அதிகரித்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ந்து சுற்றுலாத் தல நகரமாக மாறும்” என்று அவர் தெரிவித்தார்.