தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு அரசு கல்வி பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 1 முதல் 11 ஆம் வகுப்புகள் தொடங்கி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவர்கள் www. scholarship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், உயர்கல்வி பயில்வோர் நவம்பர் 30-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.புதிதாக விண்ணப்பிக்கும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கல்வி உதவித்தொகை தொடர்பான விவரங்களை www.minorityaffairs.gov.in/schemes/என்ற இணையதளம் மூலமாக அறியலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.