Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : புதிய சாதனை நிகழ்த்திய அஸ்வின் …!!

இந்தியா – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சளர் அஸ்வின் புதிய சாதனையை அரங்கேற்றியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 55 ஓவர்களில் 140 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகின்றது. இந்திய அணி சார்பில் அஸ்வின் , ஷமி 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, உமேஸ் யாதவ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய அஸ்வின் புதிய சாதனை படைந்த்துள்ளார். இந்திய மைதானத்தில் 250 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர் என்ற புதிய மைக்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக அணில் கும்ப்ளே , ஹர்பஜன் சிங் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Categories

Tech |