கொரோனாவை கட்டுப்படுத்த மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சுமார் 221 நாடுகளில் பரவி கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனாவை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகளும் உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், சுமார் 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 நபர்கள்.
இந்நிலையில், மெர்க் என்ற நிறுவனம் கொரோனாவை தடுப்பதற்கு மாத்திரை தயாரித்திருந்தது. தற்போது இங்கிலாந்து அரசு, அந்த மாத்திரைக்கு அனுமதி அளித்திருக்கிறது. தடுப்பூசிகளை தயாரிப்பதை காட்டிலும் மாத்திரைகளை எளிதில் தயாரித்து விடலாம். இதனால், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, தற்போது இங்கிலாந்து தான் உலக நாடுகளிலேயே கொரோனாவை தடுக்க மாத்திரையை பயன்படுத்தும் முதல் நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.