இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது .
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .நடப்பு டி20 தொடரில் இடம்பிடித்துள்ள டிரென்ட் போல்ட் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதேபோல் காலின் டி கிராண்ட்ஹோம் இந்த தொடரிலிருந்து விளக்கியுள்ளார் .
நியூசிலாந்து டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டோட் ஆஸ்டில், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லோக்கி ஃபர்குசன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் செய்ஃபெர்ட், இஷ் சோதி, டிம் சவுத்தி
நியூசிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டேவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், கைல் ஜேமிசன், டாம் லாதம், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், வில் சோமர்வில், டிம் சௌதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.