ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் மோதியதில்லை . எனவே முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது .இப்போட்டியை காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் ,கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இப்போட்டியை திடீரென்று ஒத்திவைத்துள்ளது. இதற்கு காரணம் தலிபான்கள் என கூறப்படுகிறது .தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அதோடு கிரிக்கெட் போட்டிகளுக்கு உதவி செய்ய மாட்டோம் என ஏற்கனவே தலிபான்கள் கூறியுள்ளனர் .
அதே சமயம் பெண்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தான் ஆப்கானிஸ்தான் உடனான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது .இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியதின் உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது,” மகளிர் கிரிக்கெட்டிற்கு ஆப்கானிஸ்தான் தடை விதித்தால் அந்நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தமில்லை. இது தொடர்பாக ஆப்கான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி டெஸ்ட் போட்டியை ஒத்தி வைத்து உள்ளோம் என்றனர். ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால் அந்நாட்டுடனான டெஸ்ட் ரத்து செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.