Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க…. ஓபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க பலரும் தொடர் போராட்டம் நடத்தி கோரிக்கை விடுத்து. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாய், டீசல் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகள் தங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்ட தை போல தமிழகத்திலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |