டி20 உலககோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன .
7-வது டி20 உலககோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தது .இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இதனிடையே மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது .அதோடு போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டும். இதனிடையே நேற்று முன்தினம் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.அதோடு ரன் ரேட் ஓரளவுக்கு வந்துள்ளது .
இதனிடையே இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. பேட்டிங்கில் ரோஹித் சர்மா ,கே.எல்.ராகுல் ,ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர் .அதேபோல் பந்துவீச்சில் அஸ்வின் முகமது ஷமி ஜடேஜா மற்றும் இம்ரான் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இதனிடையே இன்றைய ஆட்டத்திலும் ரன் ரேட்டை உயர்த்தும் முயற்சியில் இந்திய அணி போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஸ்காட்லாந்து அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தொடர் தோல்வியை சந்தித்ததால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது .இதனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி கணக்கை தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு7.30 மணிக்கு நடைபெறுகிறது.