பணத்தை திருடிய லேப் டெக்னீசியனை கண்டுபிடித்த காரணத்திருக்காக இன்ஸ்பெக்டரை கமிஷனர் பாராட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அலுவலகத்தில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மதன் அண்ணாநகர் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அங்கு லேப் டெக்னீசியன் ஆகப் பணிபுரியும் அஜித்குமார் என்பவர் பணத்தை திருடிய காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் பின் அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 2 லட்சத்தி95 ஆயிரம் ரூபாய் பணம், 71/2பவுன் தங்கம் நகை, மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட பாலமுருகனை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டியுள்ளார்.