Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு தடுக்கக்கூடிய வகையில் வேதிப்பொருள் அல்லாத பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அதனை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை அன்று நீதிமன்றம் நடவடிக்கைகளை பொதுமக்கள் மீறினார்கள். சென்னை மாநகரத்தில் பட்டாசு நச்சுப் புகையால் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு 50 ஆக இருந்தால் நல்லது என்றும் 100 வரை இருந்தால் திருப்தியானது. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு 500 ஐ தாண்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆலந்தூரில் 895 மற்றும் மணலியில் 578 ஆகவும் காற்று மாசுபாடு பதிவாகி இயல்பை விட 20 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சில நாட்களில் மனிதர்களுக்கு நுரையீரல் நோய் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த அளவு காற்று மாசு பகுதியில் வாழ்பவர்கள் 45 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பார்களோ அவ்வளவு சுவாசித்திருப்பார்கள்.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளது. அதில் நச்சு புகையில் இருந்து நாட்டை காக்க வேண்டுமென்றால் பட்டாசு ஆலைகளுக்கு மாற்று தொழில் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வருவாய்க்கு உரிய திட்டங்களை அரசு வழிவகுக்க வேண்டும். மேலும் சமூக நல இயக்கங்கள் பகுத்தறிவு இயலாத பட்டாசு தீமையை விலக்கி கொண்டால் நச்சுவாயுவில் அடுத்த தலைமுறைக்கு விடுதலை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |