மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த மர்ம நபரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பெல்நகரில் ஓய்வுபெற்ற போலீசாரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயம் உள்ள சிக்னலை மீறி சென்றுள்ளார். அப்போதுஅங்கு வந்த மர்ம நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியதற்காக மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதாக ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு கோட்டை காவல் நிலையத்திற்கு வந்து அவதார தொகையை செலுத்திவிட்டு மோட்டார்சைக்கிளை பெற்று செல்லுமாறு அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளை நாங்கள் பறிமுதல் செய்ய வில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் துறையூரில் வசிக்கும் கார்த்திக் என்பவர் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு கார்த்திக்கை கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.