Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்…. ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் மாற்றுவதில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் போல் இணையதளங்களை உருவாக்கி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மார்ட், OLX, குயிக்கர், ஈபே போன்ற முன்னணி இணைய தளங்கள் மூலமாக பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகின்றனர்.

இதன் மூலம் மக்கள் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இதில் அதிக அளவு மோசடி நடைபெறுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி பலர் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அரசு ஒப்புதல் அளிக்கப்படாத இணையதளங்கள் மூலம் மக்கள் பணம் இழப்பதற்கு பொறுப்பு ஏற்காது. பண பரிவர்த்தனைக்கு ஆதாரமாக இருக்கும் வங்கிகளும் பொறுப்பாகாது. இந்த நாணயங்களை விற்பனை செய்பவர் மற்றும் அதை வாங்குபவர்கள் தான் கவனமுடன் செயல்பட வேண்டும். இது போன்ற பழைய நாணயங்களை விற்பனை செய்யும் இணையதளங்களை சரி பார்த்துவிட்டு அதன்பிறகு பண பரிவர்த்தனைகளை ஈடுபட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |