Categories
மாநில செய்திகள்

மாசில்லா தமிழ்நாடு…. ”10,00,000 மாணவர்கள்” கின்னஸ் சாதனை… தொடங்கி வைத்த முதல்வர் …!!

 நெகிழி விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் ‘பிளாஸ்டிக்’ எனப்படும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் நெகிழிப் பயன்பாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

அதனடிப்படையில், ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் 10 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்ற கின்னஸ் சாதனை முயற்சியை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மைதானங்களில் ஒன்று சேர்ந்து ‘நெகிழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நெகிழி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் செந்தில்வேலன் கூறுகையில், “நெகிழிப் பொருள்கள் மண்ணுக்குள் போவதால் மழைநீரைச் சேமிக்க முடியாமல் போகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுப் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்.9ஆம் வகுப்பு பள்ளி பாடத்திலும் நெகிழி ஒழிப்பு குறித்து பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்கள் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வைப் பெறுவார்கள்” என்று கூறினார்.

Categories

Tech |