Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீபாவளியை கொண்டாட சென்றபோது…. வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து மின் வேன் மீது மோதியதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், விபூஷன் என்ற 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் மணி மனைவி மற்றும் மகனுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஆதிபட்டி புறவழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலை அருகே மினி வேன் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.

இதனையடுத்து மணியின் இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த மினிவேன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் மணி மற்றும் சிறுவன் விபூஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைதொடர்ந்து கவுசல்யா பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் கவுசல்யாவை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த 2 பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் வழக்குப்பதிவு செய்து சாலை அருகே அஜாக்கிரதையாக நிறுத்தி வைத்த மினி வேன் டிரைவர் சந்துரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |