Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வர் ஸ்டாலின் செய்த சிறப்பான செயல்…. நன்றி தெரிவித்த நடிகை ஜோதிகா….!!!

தலைமை பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று ஜோதிகா கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் வாழ்ந்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர், அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்குவதற்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் அந்தப் பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களையும், தீபாவளியை முன்னிட்டு வேட்டி சேலைகளை வழங்கினார்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களே மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற நீங்கள் முடிந்தவரை சிறப்பாக உழைத்து வருகிறீர்கள். அதனை உடனடியாக செய்து வருகிறீர்கள். தலைமைப் பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்பதை காட்டுகிறது. மேலும் கல்வித் துறையில் நீங்கள் கொண்டுவரும் நேர்மையான மாற்றம் ஒரு குடிமகளாக எனக்கும் சரி, அகரம் அமைப்பிற்கும் சரி, கடந்த 16 வருடங்களில் பார்க்காதது.

குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு நீங்கள் வழங்கிய பட்டா, சாதி சான்றிதழ் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் ஆகியவை நம் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது. முதலும் முடிவுமாக நாம் இந்தியர்கள் என்ற அம்பேத்கரின் வார்த்தையை நிஜம் ஆக்கியதற்கு நன்றி. உங்களுக்கு ஒரு குடிமகளாக மட்டுமல்ல தியா மற்றும் தேவ்வின் அம்மாவாக எனது மரியாதையையும் நன்றியும் கூறிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |