Categories
மாநில செய்திகள்

முதல்வர் உத்தரவு… வேலை வாங்கித்தருவதாக பணமோசடி… முன்னாள் அதிமுக அமைச்சர் உட்பட 30 பேர் அதிரடி கைது!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் முக ஸ்டாலின் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியனின் உதவியாளர், மறைந்த அதிமுக நிர்வாகி பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஆபரேஷன் ஜாப் ஸ்கேம் அதிரடி நடவடிக்கை : 

வேலை வாங்கித் தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டார் :

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதியப்பட்டு, 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் அரசு வேலை, சிலர் வங்கி வேலை, சிலர் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் திரு ஓ.எஸ் மணியனின் உதவியாளர், தஞ்சாவூரை சேர்ந்த சேஷாத்திரியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி திருமதி ராணி எலிசபத்(36) மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாக கூறி கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர்.

இந்த 30 மோசடி நபர்களும் தீபாவளி முந்தைய தினத்தன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீது இன்னும் பல புகார்கள் உள்ளன.

இது போன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் அடையாளம் கண்டு இவர்களிடம் இனியும் மக்கள் ஏமாறக் கூடாது. இது போன்ற ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள காவல்துறை தலைமையிட கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்கள். 044-28447701 & 28447703 (fax), செல்: 94981 05411 (whatsapp) மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எண்.044-23452359, சென்னை காவல் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவு எண்.044-23452380 ஆகியவற்றை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Categories

Tech |