Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீசை தாக்கிய திமுக பிரமுகர்…! போலீஸ் வழக்குப்பதிவு…. தூ.டியில் பரபரப்பு …!!

தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு நாசர் என்பவரின் மகன் சதாம் உசேன் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னக் கடைத் தெருவை சேர்ந்த திமுக பிரமுகரும் விஜய் ரசிகர் மன்ற தலைவருமான, பில்லா ஜெகன் தனது நண்பர்களுடன் மது அருந்த அறை ஒதுக்குமாறு காவலாளி சதாம் உசேனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் அறை தரமுடியாது என்று கூறியதால், அவரை அடித்து, உதைத்து, கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி கொலை வெறியோடு கூட்டாக சேர்ந்து தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பில்லா ஜெகன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. மேலும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |