தமிழகத்தில் உள்ள திமுக அரசுக்கும், கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கும் என்ன கள்ள உறவு ? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தாயார் சன்னதி அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்வை திரைக்கு முன்பாக அமர்ந்து பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசும்கூட்டணி கம்யூனிஸ்ட் அரசும், கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக இருந்து வருவதாக சாடினார்.
நாட்டின் துணைப் பிரதமராக வேண்டும் என்கிற கனவில் கேரள கம்யூனிஸ்ட் ஆதரவாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என குற்றம்சாட்டிய அண்ணாமலை முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வருகின்ற 8 ஆம் நாள் தேனியில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். மேலும் ஸ்டாலின் அரசுக்கும் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு அரசுக்கும் என்ன கள்ள உறவு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.