Categories
தேசிய செய்திகள்

வரும் 8-ஆம் தேதியிலிருந்து….. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் லாஸ்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் பகுதியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் காரணத்தினால் வரும் 8ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவரக்ளுக்கும் பள்ளிகள் திறக்க பட உள்ளது.

அன்று முதலே மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். மாணவர்களுக்கு அக்ஷய பாத்திரம் மூலமாக உணவு மதிய உணவு வழங்குவதற்கான பணிகளை ஆய்வு செய்துள்ளோம். அதற்கான பணி இன்னும் முடிவடையாத காரணத்தால் எட்டாம் தேதி புதுச்சேரி அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இலவச பேருந்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |