தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சில இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் வருகின்றது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.