பிரதமர் ஹரிஷ் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுவது நவம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
மானிய விலை உணவு தானியத்தை க்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வந்தாலும் வெளிச்சந்தையில் உணவு தானியங்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் கோடை காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி அல்லது கோதுமை திட்டம் வரும் 30 ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்க படாது என்ற உத்தரவை ஏழை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது.