Categories
உலக செய்திகள்

‘இனிமேல் கவலை வேண்டாம்’…. புதிய மாத்திரைகள் கண்டுபிடிப்பு…. ஒப்புதல் அளித்துள்ள பிரிட்டன் அரசு….!!

கொரோனா தொற்று சிகிச்சைக்கான இரண்டு மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொரோனா தொற்று சிகிச்சைக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளனர். அதற்கு மோல்நுபிராவிர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த மாத்திரையை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான 5 நாளில் எடுத்துக் கொள்ளலாம். இதனை காலை மாலை என இரு வேளை ஒரு மாத்திரை வீதம் உட்கொள்ளலாம். இந்த மாத்திரையை இங்கிலாந்து அரசின் எம்.எச்.ஆர்.ஏ. என்ற அமைப்பு அங்கீகாரம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த மாத்திரையானது முதன்முதலில் பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த மாத்திரை தொடர்பான தரவுகள் கடந்த மாதம் வெளியானது.  அதன் அடிப்படையில், கொரோனா தொற்று பாதிப்பின் தொடக்கத்தில் இருப்பவர்கள் இதை உட்கொண்டால் கடுமையான விளைவுகளில் இருந்து மீளலாம் என்றும் உயிரிழப்பிற்கான வாய்ப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையானது இங்கிலாந்தில்  ‘லேகேவ்ரியோ’ என்ற பெயரில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் பைசர்  நிறுவனமும் கொரோனா தொற்று சிகிச்சைக்கான மாத்திரையை கண்டுபிடித்துள்ளது. அதற்கு ‘பேக்ஸ்லோவிட்’ என்று பெயரிட்டுள்ளனனர். இந்த மாத்திரையை காலை,மாலை என இரு வேளைகளில் உட்கொள்ளலாம். இது மருத்துவமனையில் சேர்ப்பவரின் எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் 89% குறைக்கிறது என்று பரிசோதனை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாத்திரைக்கு விரைவில் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பிடம் பைசர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Categories

Tech |