இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவரான பிரின்ஸ் ஆண்ட்ரூ கடந்த 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்தார். அங்கு பிரின்ஸ் ஆண்ட்ரூக்கு, ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்தியதாக தெரிகிறது. அப்போது விர்ஜீனியாவை, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ கற்பழித்ததாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண்ணான விர்ஜீனியாவுக்கு அப்போது 17 வயது தான் இருந்ததாக தெரியவந்தது.
இவ்வாறு மைனர் பெண்ணான விர்ஜீனியாவை மிரட்டி பிரின்ஸ் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விர்ஜீனியாவுக்கு தற்போது 37 வயதாகும் நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்த விசாரணை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதன்படி 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி லீவிஸ் ஏ.கப்லன் அறிவித்தார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த விசாரணை தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். இதனிடையில் விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார். அவர் இளவரசர் மீதான செக்ஸ் புகாரில் தன்னிடமும் விசாரணை நடத்தக் கூடும் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீனின் முன்னாள் காதலியும் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கின்றார்.