Categories
மாநில செய்திகள்

முழு நிர்வாணமாக அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அரசியல் பிரபலம்…. பரபரப்பு….!!!!

மதுபோதையில் வேறு ஒருவரின் வீட்டிற்குள் புகுந்ததாக அதிமுக முன்னாள் எம்பிக்கு அடி உதை விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி எம்பியாக இருந்த அதிமுகவின் கோபாலகிருஷ்ணன் தீபாவளி அன்று மது பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குடித்து விட்டு இரவு நேரத்தில் முத்தாலம்மன் பேட்டை பகுதியில் ஒரு வீட்டிற்குள் புகுந்து உள்ளார். அதனால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பதறினர்.அதன்பிறகு போதை தலைக்கு ஏறி முழு நிர்வாணமாக வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் போற்றி, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனை கடுமையாக தாக்கி வீட்டிற்குள் செய்த அட்டகாசத்தை வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் எம்பி மதுபோதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |