உலகில் கார்பன் உமிழ்வு கொரோனா பாதிப்பிற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பியிருக்கிறது என்று உலக வானிலை அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த சமயங்களில், கார்பன் உமிழ்வு 5.6 ஆக இருந்தது. ஆனால், தற்போது கடந்த 2019ஆம் வருடத்திற்கு முன்பு இருந்த கார்பன் உமிழ்வின் அளவைப் போன்று உள்ளது என்று உலக வானிலை அமைப்பின் தலைவரான Petteri Taalas கூறியிருக்கிறார்.
கடந்த வருடத்தில் சுமார் 1.9 மில்லியன் டன் கார்பன் உமிழ்வு தடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், வாகனங்களினால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் காட்டிலும், தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் நிலக்கரி உமிழ்வுகளும், இயற்கை எரிவாயுவும் அதிகம் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.