Categories
உலக செய்திகள்

குறுங்கோள்கள் பூமியில் மோதாமல் தடுக்க…. ‘டார்க்’ விண்கலம்…. நாசாவின் புதிய திட்டம்….!!

குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்கும் புதிய பாதுகாப்பு திட்டம் ஒன்றை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘இரட்டை குறுங்கோள் திசைமாற்றும் சோதனை’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, நாசா இந்த மாத இறுதியில் விண்கலம் ஒன்றை ஏவி சிறுகோள் மீது மோதசெய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் குறுங்கோள்கள் பூமியின் மீது மோதாமல் தடுக்க உதவுகிறது. இந்த திட்டத்தின்படி, வருகிற 24 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள ‘டார்ட்’ என பெயரிடப்பட்ட விண்கலத்தை குறுங்கோள் நோக்கி செலுத்தப்பட உள்ளன.

இது குறித்து நாசாவின் கிரக பாதுகாப்புத்துறை அதிகாரி லின்ட்லே ஜான்சன் தெரிவித்ததாவது, “இது சோதனை அடிப்படையிலான முயற்சி. மேலும், விண்கலம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆராய விரும்புகிறோம்” என்றும் கூறினார். இந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டென்பெர்க்  விமானப்படை தளத்தில் இருந்து விண்கலம் செலுத்த உள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ‘டார்ட் விண்கலம்’ ஆனது டைடிமாஸ் மற்றும் டைமார்போஸ் ஆகிய குறுங்கோள்களை அடையும் என்றும் தகவல் தெரிவித்தனர்.

Categories

Tech |