Categories
உலக செய்திகள்

“ரஷ்ய தூதரக சாலையில் மர்மமாக மரணமடைந்த அதிகாரி!”.. உடற்கூராய்விற்கு அனுமதி மறுப்பு..!!

பெர்லினில் இருக்கும் ரஷ்ய தூதரக சாலையில் ஒரு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் ரஷ்ய தூதரக சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று ஒரு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்திருக்கிறார். அவர் தூதரக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த அதிகாரி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்ந்த பதவியிலும், தூதரகத்தின் இரண்டாவது செயலர் பொறுப்பிலும்  இருந்திருக்கிறார். அவர், உயிரிழந்ததற்கு காரணம் என்ன? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த அதிகாரியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய ரஷ்ய அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |