Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா…. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தடை….!!!

திருவண்ணாமலையில் வருகின்ற 19ஆம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.அண்ணாமலையார் மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்கள்,பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேரோட்ட விழாக்கள் இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப் போல கொரோனா ஆகம விதிகளின்படி கோவிலின் வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளி மாவட்ட மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திட திருக்கோவில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து ஒரு நபருக்கு ஒரு நுழைவுச்சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் நாளை ஆறாம் தேதி முதல் முன்பதிவு செய்து கொண்டு அதனடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |