தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக உள்ளதால் நவம்பர் 9 முதல் 12ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தமிழக-ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாகி அடுத்த ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். இதனால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.