Categories
தேசிய செய்திகள்

“கள்ளச்சாராயம்” 23 பேர் உயிரிழப்பு…. 700 அதிகாரிகள் பணியிடை நீக்கம்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 23 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்ததுடன் 700 அரசு அதிகாரிகள் இதன் காரணமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பீகார் அமைச்சர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பாரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 2 நாட்களில் 23 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -ற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயத்தால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், மாநில அமைச்சர் சுனில் குமார் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். அதில் இது உள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அலட்சியத்தின் காரணமாக நடந்துள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் நிலைய பொறுப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து மதுவிலக்கு அமலுக்கு வந்த நாளிலிருந்து அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுவரை 187 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 3,00,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 60 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும் இதுவரை 700-க்கும் அதிகமான அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |