மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். விஐபிக்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் இருமடங்காகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
அதுபோல தொழிலில் தேங்கிய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உங்களின் கோரிக்கை மேலிடத்தால் ஏற்கப்படும். அது உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகக் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்