தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மழை தொடரும்.
இன்று கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.