Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு ”சம்பள உயர்வு , பதவி உயர்வு” இருக்கும் …!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாளாக இருக்கும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலமான தகவல்கள் வந்துசேரும். உங்களுடைய கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வியாபார விரோதம் விலகிச்செல்லும். இன்று அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து  சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.

பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். மேலதிகாரியின் பாராட்டுகள் கிடைக்கும். சம்பளம் உயர்வு போன்ற பேச்சுவார்த்தைகள் நடக்கும். பதவி உயர்வு கூட கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். இன்று அதிகார மட்டத்தில் உங்களது செல்வாக்கு உயரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மேலோங்கும். சமூகத்தில் அந்தஸ்து பெருகும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் அமையும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |