Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 23 நாட்கள் பொது விடுமுறை…. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 2022ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை தினங்களில் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. வருடந்தோறும் ஒவ்வொரு மாநில அரசுகளும் அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை முன்னதாகவே வெளியிடும்.அதன்படி தமிழக அரசு தற்போது அடுத்து வரும் 2022-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2022ஆம் ஆண்டில் 23 பொது விடுமுறை தினங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமை குழுவுடன் பின் வரும் நாட்களும் 2022 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் ஆக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் 2022ம் ஆண்டின் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை தினங்களில் 6 நாட்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |