சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ”டாக்டர்” திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’, ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.