நெல் கொள்முதலை துரிதமாக செய்யவேண்டுமென்று சசிகலா அறிக்கை விட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக தஞ்சையில் என்னை சந்தித்தவர்கள் ஒரு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்தனர். அதில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும், அது மழையில் நனைந்து வீணாகி வருவதால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து வீணாகி வருகின்றது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.