Categories
மாநில செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை …!!

தமிழகத்தில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

பொதுப்பணித் துறை , கட்டடங்கள் , நீர்வளத்துறை ஆகிய துறைகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பணித்துறை மாநில, மண்டல பொறியாளர்கள் பங்கேற்ற்றுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பங்கேற்றிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிமரத்து பணிகள் குறித்தும் , அத்திக்கடவு அவிநாசி திட்டம்  குறித்து விவாதிக்கப்படுகின்றது.

மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதா ? எந்த அளவுக்கு அகற்றப்பட்டுள்ளது உள்ளிட்ட முதல்வரின் பொதுப்பணித்துறை குறித்த ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இதில் சம்மந்தப்பட்ட துறையின் உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில்  மக்கள் இயக்கமாக உருவாக்கி, குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுகிறோம் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

Categories

Tech |